திராவிட வாசகர் வட்டம் நடத்தும்,
பேரறிஞர் அண்ணா நினைவு
சிறுவர் கதைப் போட்டி 2020
நோக்கங்கள்:
1) சிறுவர் கதைகள் வாசிப்பை ஊக்குவித்தல்.
2) புதிய எழுத்தாளர்களை இனங்காணுதல்.
போட்டி:
சிறுவர்களுக்கு ஆர்வமும் அறிவும் வளர்க்கும் வகையில் எந்த ஒரு பொருள் குறித்தும் கதை அமையலாம்.
கதைகளை எழுதி கிண்டில் புத்தகமாக வெளியிட வேண்டும்.
கதைகளில் கற்பனை / Fantasy கலந்து எழுதலாம். ஆனால், மூட நம்பிக்கை, புராணக் கதைகள், இட்டுக்கட்டிய போலி வரலாற்றுக் கதைகள், பாத்திரங்கள் சார்ந்து அமையக் கூடாது.
அறிவியல், வரலாறு, இலக்கியம், இயற்கை, நன்னெறிகள் (அன்பு, அறம், வீரம், சமூகநீதி, தன்மானம் முதலியவை) போன்றவற்றை அறிமுகப்படுத்தும் வகையில் கதைகள் அமையலாம். கதைகளைக் குழந்தைகளே விரும்பிப் படிக்கும் / கேட்கும் வகையில் எழுதுங்கள். வெறும் நீதி போதனையாக அமைய வேண்டாம்.
விதிகள் மற்றும் வழிகாட்டல்கள்:
* அனைத்து வயதினரும் பங்கேற்கலாம்.
* கிண்டில் நூல் ஒரே கதையாகவோ, பல சின்னஞ்சிறு கதைகளின் தொகுப்பாகவோ அமையலாம்.
* ஒருவர் எத்தனை கதை வேண்டுமானாலும் அனுப்பலாம்.
* கதை நல்ல தமிழ் நடையில் பிழையின்றி அமைய வேண்டும். கதையின் நடை 10 வயது சிறுவர்கள் தாங்களே படிக்க இயலும் வகையில் எளிமையாக இருக்க வேண்டும்.
* சிறுவர்கள் படிக்கும் வழக்கத்தைக் கருத்தில் கொண்டு சொற்களின் எண்ணிக்கை இருக்கலாம். கதைக்குத் தேவை என்றால் எத்தனைப் பக்கங்கள் வேண்டுமானால் எழுதலாம்.
* சொந்தமாக, புதிதாக எழுதிய கதையாக அமைய வேண்டும். ஏற்கனவே உள்ள கதைகளைத் தழுவியோ மொழிபெயர்த்தோ எழுதக் கூடாது.
* நீங்கள் ஏற்கனவே வேறு இடங்களில் எழுதிய கதைகளை அனுப்பலாம். பரிசுக்குத் தெரிவானால் அது உங்கள் கதை தான் என்று உறுதி செய்ய வேண்டி வரும்.
* கதையின் கற்பனை, எழுத்து நடைக்கு மட்டுமே மதிப்பெண். கதையின் அட்டைப்படம் / ஓவியம் / படங்களுக்கு மதிப்பெண் கிடையாது.
* கதைகளைக் கிண்டில் மின்னூலாக ஏப்ரல் 15, 2020க்குள் பதிவேற்ற வேண்டும்.
* ஒவ்வொரு கிண்டில் புத்தகத்திலும் #AnnaKidsStoryContest2020 என்ற குறிச்சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
* கிண்டிலில் புத்தகம் வெளியிடுவது எப்படி என்ற வழிகாட்டுக்கு இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். உங்கள் கிண்டில் நூலை KDP Select என்னும் Kindle Unlimited சேவையில் கட்டாயம் இணைக்க வேண்டும். இதற்கான வழிகாட்டல் இந்தப் புத்தகத்தில் உண்டு.
* கிண்டிலில் பதிவேற்றப்பட்ட உங்கள் கதைக்கான link ஐ Dravidian Books என்ற Facebook பக்கத்தின் Inbox க்கு, உங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களோடு அனுப்பி வைக்க வேண்டும். “Dravidian Books”, பக்கத்தின் இன்பாக்ஸுக்கு அனுப்பப்படும் link கள் மட்டுமே போட்டியில் கலந்துகொண்டதாக கருதப்படும்.
* நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
பரிசுகள்:
முதற் பரிசு – 10,000 INR , 2 கிராம் தங்க நாணயம், மற்றும் கணிப்பலகை (Tablet PC)
இரண்டாம் பரிசு – 5,000 INR மற்றும் 1 கிராம் தங்க நாணயம்
மூன்றாம் பரிசு – 2,000 INR மற்றும் அரை கிராம் தங்க நாணயம்.
ஐந்து சிறப்புப் பரிசுகள் – தலா 1,000 INR
இறுதிப் போட்டிக்குச் செல்லும் 25 பேருக்கு Periyarbooks.in வலைத்தளம் 500 ரூபாய் மதிப்பு மிக்க கூப்பன் அன்பளிப்பாக வழங்கும்.
* பரிசுத் தொகையை இந்திய ரூபாயில் இந்தியாவுக்குள் மட்டும் தான் அனுப்பி வைக்க முடியும்.
பெரியார் படம் பொறித்த இந்த தங்க நாணயங்களை Ingersal Selvam வழங்க இருக்கிறார்.
கணிப்பலகை பரிசாக வழங்குபவர் Neil Armstrong .
தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளை அருமையான படங்கள் சேர்த்து அச்சுப் புத்தக வடிவிலும் வெளியிட முனைவோம்.
முதற்கட்ட மதிப்பீட்டு முறை:
* மே 15, 2020 தேதி இந்திய நேரம் இரவு 11:59 வாக்கில் கிண்டிலில் குறைந்தது 10 கருத்துரைகளைப் பெறும் அனைத்து புத்தகங்களும் இறுதிப் போட்டிக்குச் செல்லும்.
* 25க்கு மேற்பட்ட/குறைவான நூல்கள் இவ்வாறு தெரிவானால், குழந்தைகளுக்கு ஆர்வம் ஊட்டக் கூடிய வகையில் உள்ளதா என்பதன் அடிப்படையில் பெற்றோர்/ஆசிரியர் அடங்கிய குழு ஒன்று 25 கதைகளை இறுதிப் போட்டிக்கு முடிவு செய்யும்.
* இந்த 25 போட்டியாளர்களில் கட்டாயம் 7 பெண்களாவது இடம் பெறுவர்.
இறுதி மதிப்பீட்டு முறை:
இறுதிப்போட்டிக்குத் தெரிவான 25 கதைகளில், முதல் மூன்று கதைகளை நடுவர் குழு தேர்ந்தெடுக்கும்.
குழந்தைகளுக்கு ஆர்வம் ஊட்டல், அறிவை மேம்படுத்தல் – இவை இரண்டும் பரிசுத் தகுதிக்கான முதன்மைக் காரணிகளாக எடுத்துக்கொள்ளப்படும். கதை வாசிக்க எளிமையாக இருக்கிறதா என்பதும் கவனிக்க வேண்டும்.
கதையின் பிற கூறுகளையும் மதிப்பீட்டு வரையறைக்குள் சேர்ப்பது நடுவர்களின் தனிப்பட்ட உரிமை.
மூன்றில் ஒரு பரிசு கட்டாயம் பெண்களுக்கு என்று ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மற்ற இரு பரிசுகள் திறந்த போட்டியாக அமையும்.
நடுவர்கள்:
* சிறார் எழுத்தாளர் திரு. விழியன் அவர்கள்
* கவிஞர் கனிமொழி MV அவர்கள்
* குழந்தைக் கவிஞர் திரு. புதுகை அப்துல்லா அவர்கள்
ஒருங்கிணைப்பாளர்: கபிலன் காமராஜ்
போட்டி ஏற்பாடு: திராவிட வாசகர் வட்டம்
போட்டிக்கான கருவை விதைத்ததற்கு நன்றி: வியன் பிரதீப்
காலம்: பிப்ரவரி 2020 – 15 ஏப்ரல் 2020.
இறுதிப் போட்டி நுழைவு அறிவிப்பு – மே 15, 2020
பரிசு பெற்றோர் விவரம் அறிவிப்பு – ஜூன் 15, 2020.
முதல் முறை நடைபெறும் இப்போட்டியின் வெற்றியின் அடிப்படையில் தொடர்ந்து இது போன்ற போட்டிகள் நடத்தப்படும்.
சுருக்கமாக:
சிறுவர்கள் ஆர்வமுடன் கேட்கக் கூடிய கதைகளைக் கிண்டிலில் பதிவேற்றுங்கள் ( #AnnaKidsStoryContest2020 என்ற குறிச்சொல்லை Amazon KDPயில் சேர்க்க மறவாதீர்கள்)
உங்கள் பெயரோடு, உங்கள் கதையின் link ஐ “Dravidian Books”, என்ற முகநூல் பக்கத்தின் Inbox க்கு அனுப்புங்கள்
உங்கள் கதை அதிகம் பேரைச் சென்றடையும் வகையில் விளம்பரப்படுத்துங்கள்.
பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
Prabhu says
சிறார் பாடல்கள் அனுப்பலாமா…
dbooks says
இந்தப் போட்டி கதைகளுக்கு மட்டும் தான்.
உமா says
மிக நல்ல முயற்சி .வாழ்த்துகள் .
dbooks says
நன்றி! 🙂
R . Shadagopan says
நனறு….
Indhu says
1.ஒரு புத்தகம் எத்தனை வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்?
2. 6 தலைப்புகள் எனக் கொடுக்கப்பட்டு 5 தலைப்புகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன?
dbooks says
1. சிறுவர்கள் படிக்கும் வழக்கத்தைக் கருத்தில் கொண்டு அளவு இருக்கலாம். கதைக்குத் தேவை என்றால் எத்தனைப் பக்கங்கள் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.
2. சிறுவர்களுக்கு ஆர்வமும் அறிவும் வளர்க்கும் வகையில் எந்த ஒரு பொருள் குறித்தும் கதை அமையலாம். கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் ஒரு வழிகாட்டல் மட்டுமே. குழப்பத்தைத் தவிர்க்கும் வகையில் விதிகளை இப்போது திருத்தி வெளியிட்டுள்ளோம்.
sanjay says
ஒவ்வொரு கிண்டில் புத்தகத்திலும் #AnnaKidsStoryContest2020 என்ற குறிச்சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
இதனை எப்படி கொடுக்க வேண்டும்? சற்று விளக்குங்கள்..
dbooks says
கிண்டிலில் புத்தகம் வெளியிடுவது எப்படி என்ற வழிகாட்டுக்கு இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். – https://www.amazon.in/dp/B082CZ1NHF . குறிச்சொல் எப்படிச் சேர்ப்பது என்ற விளக்கம் இதில் உள்ளது.
Vijirkrishnan says
கதை எத்தனை பக்கங்கள் எழுத வேண்டும்..
dbooks says
சிறுவர்கள் படிக்கும் வழக்கத்தைக் கருத்தில் கொண்டு அளவு இருக்கலாம். கதைக்குத் தேவை என்றால் எத்தனைப் பக்கங்கள் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.
ம அருளப்பா says
அருமையான போட்டி. பாராட்டுகள்..
dbooks says
மிக்க மகிழ்ச்சி. நன்றி.
A.C. ARIFAH says
பக்கங்கள். குறைந்தது எவ்வளவு இருக்க வேண்டும்… அதிகபட்சம் எவ்வளவு இருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்த வேண்டும்.
dbooks says
சிறுவர்கள் படிக்கும் வழக்கத்தைக் கருத்தில் கொண்டு சொற்களின் எண்ணிக்கை இருக்கலாம். கதைக்குத் தேவை என்றால் எத்தனைப் பக்கங்கள் வேண்டுமானால் எழுதலாம். குறைந்தபட்சம், அதிகபட்சம் என்று எல்லை எதுவும் இல்லை.
G.CHOKKAPPA says
நல்ல முயற்சி பாராட்டுகள்
Sumathy Ramesh says
என்னால் முடியும்..இனிதே ஆரம்பிக்கிறேன்..வாழ்க வளமுடன்..
Sheela Sivakumar says
என் மகள் ஆங்கிலத்தில் எழுதுகிறாள். அனுப்பலாமா?
dbooks says
இந்தப் போட்டி தமிழில் மட்டும் தான் நடத்துகிறோம். உங்கள் மகளின் ஆங்கிலக் கதைகளைக் கிண்டிலில் பதிப்பித்தால், படித்து மகிழ்வோம். வாழ்த்துகள்.
கலாப்ரியா says
நல்ல பொறுப்பான பதில்
மணிகண்டன் says
கிண்டில் என்றால் என்ன?
நான் குறும்படங்களுக்காக நிறைய கதைகள் எழுதியுள்ளேன். நிறைய சமூக கருத்துக்களையும் பதிவிட்டுள்ளேன். அதை அனுப்பலாமா? குழந்தைகளுக்கான தொழில்நுட்பம் பற்றிய கதைகள் எழுதி அனுப்பலாமா?
dbooks says
குழந்தைகளுக்காக எழுதிய கதைகளை மட்டும் அனுப்பவும். Android phoneல் Kindle என்று app தேடிப் பாருங்கள். இதில் மின்னூல்களைப் படிக்கலாம். தங்கள் கதையை இத்தகைய கிண்டில் மின்னூலாகப் பதிவேற்ற வேண்டும். எப்படி கிண்டிலில் புத்தகத்தை வெளியிடுவது என்பதை அறிய https://www.amazon.in/dp/B082CZ1NHF பாருங்கள்.
முகம்மது அர்ஷத் says
முழுக்க முழுக்க குழந்தைகள்
Fantasy கதைகளாக எழுதலாமா.
dbooks says
Fantasy யாக எழுதலாம். மூட நம்பிக்கை மட்டும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டுக்கு, ஒருவன் மாயக் கம்பளத்தில் பறந்தான் என்று எழுதலாம். ஆனால், அதைத் திருடிய ஒருவனுக்குச் சித்திரகுப்தன் தண்டனை கொடுத்தான் என்று எழுதாதீர்கள்.
Pagutharivu Annadurai says
நல்ல தமிழ்நடை எனில் பேச்சுத் தமிழில் இருக்கலாமா?
ஆங்கிலவார்த்தைக் கலப்பின்றி இருக்க வேண்டுமா?
dbooks says
எழுத்தாளரின் பார்வையில் உள்ள விவரிப்புகள் நல்ல தமிழிலும் கதையின் பாத்திரங்கள் பேசுவது பேச்சுத் தமிழிலும் இருக்கலாம். எடுத்துக்காட்டுக்கு: “அன்று முழுதும் ராணி உற்சாகமாக இருந்தாள். பாட்டியிடம் “எனக்கு முறுக்கு செஞ்சு தருவியா பாட்டி?” என்று கேட்டாள். இங்கு செஞ்சு என்பது பேச்சுத் தமிழில். அது உரையாடலில் வருகிறது. மற்ற சொற்கள் அனைத்தும் நல்ல தமிழ். ஆங்கிலச் சொற்கள் முடிந்த அளவு தவிர்க்கவும்.
Aasim Mustafa says
அருமை
Yudhamanyu says
Which format can be used to send story? How to send the story?
dbooks says
தங்கள் கதையை இத்தகைய கிண்டில் மின்னூலாகப் பதிவேற்ற வேண்டும். எப்படி கிண்டிலில் புத்தகத்தை வெளியிடுவது என்பதை அறிய https://www.amazon.in/dp/B082CZ1NHF பாருங்கள்.
Ushamuthuraman’ says
I have sent you link. Please confirm
dbooks says
இப்புத்தகத்தை Amazon.in தளத்தில் இட்டு இணைப்பு தர முடியுமா? தற்போது https://www.amazon.com/Thirukural-kathaikal-Tamil-Usha-Muthuraman-ebook/dp/B086RZBM8N என்ற முகவரியில் உள்ள நூலை Kindle Unlimitedல் தாருங்கள்.
Ushamuthuraman’ says
Amazon I have published
Alagu Raj says
Kdp pricing and processing , editing is hard, you can arrange any other type of submission it will be eassy to submit stories.
dbooks says
Yes, it is hard to learn. But, once you learn it is easy afterwards. If you submit stories by email, no one except the judge will read. We want people to read your stories. If you need help in Kindle publishing, we are organizing a FB live workshop tomorrow. Like and follow https://www.facebook.com/pg/dravidianbooks/ for details.
Mohamed Thasneem says
I have published the book to take a participation in this #AnnaKidsStoryContest2020. Please check my book in below mentioned link,
https://www.amazon.in/s?k=Mohamed+Thasneem&ref=nb_sb_noss
Mohamed Thasneem says
https://www.amazon.in/dp/B086XKTF5Q/ref=sr_1_1?dchild=1&fbclid=IwAR3OkC_-PwyhuXFEMu9mda3gkZRobRXld8THU9MqJ3U4zrlPE2prpJLDbXE&keywords=Mohamed+Thasneem&qid=1586500595&sr=8-1
Mysha says
please send me Email address
G.Kalayarassy says
என் பெயர் ஞா.கலையரசி.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு எனும் தலைப்பில் கிண்டிலில் புத்தகம் வெளியிட்டு அதற்கான இணைப்பா உள்பெட்டிக்கு ஏற்கெனவே அனுப்பிவிட்டேன்.நன்றி.
வணக்கம்.
Mohamed Arsath says
நான் என் கதையை. Pdf வடிவில் மாற்றி விட்டேன்.
எப்படி upload செய்ய வேண்டும் மென்று உதவுங்கள் மேலே குறிப்பிட்டுள்ள link ல்
சென்றால் புதிதாக கற்றுக்கொள்ள புத்தகம் வாங்க வேண்டி உள்ளது.
தயவசெய்து விரைவாக பதில் அளிக்கவும்
B ARUNA says
would you extend children story contest date/
Sushila Krishanamoorthi says
This is Sushila Krishnamoothi. I have already published my book in Kindle
https://www.amazon.in/s?k=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87&ref=nb_sb_noss
But what I felt was during these difficult days if some extension of last date is given, many will benefit as myself would also like to create some more stories. Secondly what is meant by ‘ கருத்துரை’ (is it review? in Amozon site?
Shall be grateful for acknowledging as to whether the link I sent is working or not.
Warm regards,
Sushi
ஜி.சுந்தரராஜன் says
கதைப்போட்டி கதைகள் அனுப்பியிருந்தேன் போட்டி முடிவு எப்போது தெரியவரும் .போட்டியில் வெற்றி பெற்றால் அறிவிப்புத் தருவீர்களா ?
ஜி.சுந்தரராஜன்