கி.பி. 2025 ல் ஒரு மீடியா பேட்டி…
நிருபர் : அப்பு சார், உங்க சிறுகதை புக் இவ்ளோ வெற்றியடையும்னு நம்புனீங்களா..?
அப்புசிவா : சத்தியமா இல்ல…ஆனா…உண்மையா நம்பினேன்.
நிருபர் : ??!! (நே.!!)…குழப்பாதீங்க..அதென்ன கதைகள்..இப்படி…
அப்புசிவா : கதையென்பது நமது உள்ளுணர்வின் அடியாழத்தின் ப்ரக்ஞையிலிருந்து பீரிட்டெழுந்த
ஜ்வாலையின் நெருப்புக்கங்குகள் கபாலத்தின் வெடிப்புகளால்………
நிருபர் : (சாமி…மாரியாத்தா..) சார்..சார்..அறுக்காதீங்க சார்..ஏற்கனவே பயந்துபோயிருக்கேன்.
அப்புசிவா : ஒகே…பல அனுபவங்களை, கேள்வி பட்டதை எழுத தோணுச்சு..அவ்ளோதான்.
நிருபர் : நெறயா ரீல் வுடறீங்கன்னு சொல்றாங்க…
அப்புசிவா : நீங்க படிச்சீங்களா..?
நிருபர் : படிச்சேன்…(படிச்சுத்தொலைச்சேன்)
அப்புசிவா : என்ன தோணுது…?
நிருபர் : சார்..வெளிப்படையா கேட்கிறேன்….இதெல்லாம் கதைன்னு எப்படி சொல்றீங்க..?
அப்புசிவா : (கோபமாக)….(சத்தமாக)….அப்புறம் இதெல்லாம் யார்தான் எழுதறதாம்…
dot.
கடந்துபோகும் வாழ்நாள், பல சிறுகதைகளால் பின்னப்பட்டிருக்கிறது. சிலது மறக்கவேண்டியதாயும் இன்னும் சில பலநூறுதடவை மனதில் உருண்டோடுவதாகவும். கனவின் மாயாஜாலங்களை விஞ்சும் நிஜ உலகின் மாய வினோதங்களை திரும்பிப்பார்க்கும் சிறு முயற்சி…இந்த கதைகள்.
புதிய அனுபவத்திற்கு தயாராகுங்கள்.