வாழ்க்கையை வாழ வந்தவர்கள் மத்தியில் சோமசுந்தரம் வாழ்க்கையை வேடிக்கை பார்க்க வந்தவன். எதிலும் நிலையானவன் இல்லை. தான் பயணிக்கவேண்டிய வழியை இதுவரை தனக்காகப் போட்டுக்காட்டியவர்களை ஒரு காதலால் இழக்கிறான். வேடிக்கை பார்ப்பதை நிறுத்திவிட்டு வாழவேண்டிய சூழல் ஏற்படுகிறது. யாரெல்லாம் அவன் வாழ்க்கையில் வந்தார்கள்? வாழப்பழகிக்கொண்டானா இல்லையா? மதத்திலும், சாதியிலும், கலாச்சாரத்திலும் உழலும் மக்களுக்கு சாதாரணமான வாழ்க்கை கூட ஏன் கடினமாக இருக்கிறது? என பல கேள்விகளுக்கு விடை தேடுகிறான். வழியில் தினுஷா, ராஜபாண்டி, இழவு மாமா, கோவிந்தி அம்மாள் என பலரும் அவனுடன் பயணிக்கிறார்கள். எல்லோரைப் பற்றியும் உங்களுக்குச் சொல்லுவான். கூடவே அவன் காதல் கதையையும்.