புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவின் பாதகங்களை விளக்கி மருத்துவர் எழிலன் நாகநாதன் ஆற்றிய மூன்று சொற்பொழிவுகளில் நூல் வடிவம்.
இது வரை இருந்த கல்விக் கொள்கைகளின் வரலாற்றை விளக்கி, தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய முறை எப்படி தகுதி உடைய நல்ல மாணவர்களை வடிகட்டுகிறது என்பதனையும் வர்ணாசிரமக் காலத்துக்கு நம்மை இட்டுச் செல்கிறது என்பதையும் ஆணித்தரமாக தரவுகளுடன் முன்வைக்கிறார்.
தமிழகத்தில் ஏற்கனவே ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு வந்துள்ள நிலையில்,
புதிய தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகளைப் புரிந்து கொள்ள இந்நூல் மிகவும் இன்றியமையாதது.
**
மருத்துவர் எழிலன் இளைஞர் இயக்கம் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பி வருகிறார். இவர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மருத்துவராகப் பணியாற்றும் பேறு பெற்றவர்.