யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் இக்கேள்விகளை நான் கேட்கவில்லை; பண்படுத்த வேண்டும் என்பதற்காகவே! எனவே ஆத்திரங் கொள்ளாது, அறிவைப் பயன்படுத்தி கேள்விகளிலுள்ள உண்மையை, நியாயத்தைப் புரிந்து, திருந்தி வாழ்வைச் செம்மை செய்து கொள்ளுங்கள். அது உங்களுக்கு மட்டுமல்ல, இச்சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும்; அறிவிற்கும் அர்த்தங் கிடைக்கும்.
பகுத்தறிவு வாழ்வுதான் மனிதவாழ்வு! இன்றேல் இழிந்த பிறப்பாவோம்.
எதையாவது சொல்லி மக்களைக் குழப்புகின்ற மதவாதிகள், மேதைகள், ஞானிகள், லோக குருக்கள், வார்த்தைச் சித்தர்கள் எல்லாம் அவர்களிடம் உண்மையிருப்பின், மனத்தூய்மை இருப்பின், அறிவு நாணயம் இருப்பின் இக்கேள்விகளுக்குப் பதில் சொல்லட்டும்! பரிசை வெல்லட்டும்.
நீங்கள் அறிவிற் சிறக்க, முழுத் தெளிவுபெற முழுவதும் படியுங்கள்.