வணக்கம்.
திராவிட வாசிப்பு மின்னிதழின் ஒன்பதாவது இதழ் இது.
இம்மாத இதழில், பெரியாரிய வாழ்வியலை குறித்து தோழர் கனிமொழி எழுதும் தொடரும், குழந்தைகள் செயல்பாட்டாளர் இனியனின் ‘குழந்தைகளும் நானும்’ தொடரும் வெளியாகிறது.
சுபாசினி எழுதிய ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்: புத்தக விமர்சனமும், சுமதி விஜயகுமார் எழுதிய அண்ணா நிச்சயம் ஒரு மாபெரும் தமிழ் மகன் தான் என்கிற புத்தக விமர்சனமும், இரா.வாஞ்சிநாதன் எழுதிய பெரியாரின் அன்றைய நீதிக்கட்சி ஆதரவும், இன்று நாம் திமுகவை ஆதரிக்க வேண்டிய காலச்சூழ்நிலையும் என்கிற விரிவான கட்டுரையும் இடம்பெற்று இருக்கிறது.
வெ. பா. செல்வக்குமரன் எழுதிய இந்தியாவில் பார்ப்பனீயமும் அதன் செயல்பாடுகளும் என்கிற கட்டுரையும், அருணா சுப்பிரமணியன் எழுதிய “சிவா மனசுல சக்தி” என்கிற சிறுகதையும், கவிஞர் ரூபன் ஜெ எழுதிய பாத யாத்திரை என்கிற கவிதையும், ராஜராஜன் ஆர். ஜெ எழுதிய இந்தியா என்னும் பழம்பெரும் கலாச்சார நாடு என்கிற பதிவும் இடம்பெற்று இருக்கிறது.
டாக்டர் ஆனந்த் தெல்தும்ப்டே அவர்களின் கட்டுரையான “அண்ணல் அம்பேத்கரின் தேசியம்” ஆகியவை இந்த இதழில் இடம்பெற்று இருக்கிறது.
பல்சுவையும், பல்வேறு தகவல்களையும் தரும் ஒரு இதழாக இது இருக்கும்.