வணக்கம்.
திராவிட வாசிப்பு மின்னிதழின் ஆறாவது இதழ் இது.
ஆதிக்கமற்ற சமுதாயம் அமைப்போம் என்பது திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கை. அந்த அடிப்படையில் இந்த இதழில் சமூகத்தில் நிலவும் பல்வேறு ஆதிக்கத்தை தொட்டு அதை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று தோழர்கள் எழுதிய கட்டுரைகள் இடம்பெறுகிறது. கனகா வரதன் “பால்புதுமையினர்” குறித்த முக்கியமான கட்டுரையை எழுதி இருக்கிறார். Kavipriya Moorthy has written an article on the interlink between Feminism and Caste in our society. இனியன் இம்முறை மாற்றுத்திறனாளி குழந்தைகள் குறித்து எழுதி இருக்கிறார். அதிர்வை ஏற்படுத்தும் கட்டுரை இது. இம்மூன்று கட்டுரைகளுமே சமூகத்தில் நாம் இன்னும் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய இடங்களை சுட்டிக்காட்டி எழுதப்பட்டு இருக்கிறது.
யூசுப் பாசித்தின் கட்டுரை 2020 பட்ஜெட்டை குறித்த பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் அவர்களின் பேச்சுகளை தொகுத்து எழுத்துப்பட்டிருக்கிறது. இதோடு, பிலால் அலியாரின் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான திமுகவின் போராட்டங்கள் குறித்த கட்டுரையும் இப்போதைய நடப்பு நாட்டு பிரச்சனைகளை பேசக்கூடியது.
மீள்வாசிப்பாக மூன்று கட்டுரைகள் இந்த இதழில் வெளியாகி இருக்கிறது. நேருவின் ஆங்கில கட்டுரை “LETTERS FOR A NATION FROM JAWAHARLAL”, அறிஞர் அண்ணாவின் “நில முதலாளித்துவம்” குறித்த கட்டுரை, பெரியார் – குன்றக்குடி அடிகளாருக்கு எழுதிய கடிதம் “போற்றுதற்குரிய தவத்திரு அடிகளார் அவர்கட்கு! – ஈ.வெ. ராமசாமி வணக்கம்” என மூன்றையும் வாசிக்கலாம்.
திராவிட கவிதைகள் பகுதியில், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதையும், உவமைக்கவிஞர் சுரதா அவர்களின் கவிதையையும் வாசிக்கலாம். அருண்குமார் வீரப்பனின் தமிழில் குடமுழுக்கு பதிவும் கவிதை நடையில் எழுதப்பட்ட புனைவு தான்.
திராவிட நாட்காட்டி, பிப்ரவரி மாத முக்கிய திராவிட நாட்குறிப்புகளை தருகிறது. திராவிட காணொளிகளில் இடம்பெற்று இருக்கும் அனைத்துமே முக்கியமான பிரச்சனைகள் குறித்து ஆளுமைகள் பேசியவை. கட்டாயம் பார்க்கவும்.