வணக்கம்.
2021 தமிழக சட்டசபை தேர்தலை ஒட்டி, திராவிட வாசிப்பு மின்னிதழை, சிறப்பிதழ்களாக கொண்டுவருகிறோம். அடுத்த நான்கு இதழ்கள், திமுக ஆட்சி காலத்தை குறித்தும், அதிமுக ஆட்சி குறித்ததாகவும் இருக்கும். அதனையொட்டி, இந்த இதழில் பேரறிஞர் அண்ணாவின் அரசியலை, ஆட்சிக்காலத்தை எடுத்து “சி.என். அண்ணாதுரை எனும் நான்” என்கிற தலைப்பில், அண்ணாவின் ஆட்சிக்காலத்தை, அரசியலை, ஆளுமையை காட்டும் கட்டுரைகளை, ஆய்வுகளை, அண்ணாவின் எழுத்துகளை, பேச்சுக்களை, அண்ணா காலத்தில் எழுப்பப்பட்ட தீர்மானங்களை, அண்ணா கொண்டு வந்த அரசாணைகள் என பல்வேறு தளத்தில் இந்த இதழை கொண்டு வந்திருக்கிறோம். இந்த இதழ் அண்ணாவின் ஆட்சியை, ஆளுமையை பறைசாற்றும் என்று நம்புகிறோம்.
இந்த இதழுக்காக பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதித்தந்த உடன்பிறப்புகளுக்கும், அண்ணா குறித்த ஆய்வு புத்தகங்களை எழுதிய ஆய்வாளர்களுக்கும் எங்களது வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த இதழில் வேறு கட்டுரைகளை எழுதிய தோழர்களுக்கும் நன்றிகள்.
இந்த சிறப்பிதழ் உங்களுக்கு பல்வேறு வரலாற்று தகவல்களையும், வரலாற்று அறிவையும் தரும் என்று நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.