வணக்கம்.
திராவிட வாசிப்பு மின்னிதழின் பதினொன்றாவது இதழ் இது.
இம்மாத இதழில், பெரியாரிய வாழ்வியலை குறித்து தோழர் கனிமொழி எழுதும் அன்றாட வாழ்வில் பெரியாரியல் தொடரில் உளஉறுதி குறித்து எழுதி இருக்கிறார். தொடரும், குழந்தைகள் செயல்பாட்டாளர் இனியனின் ‘குழந்தைகளும் நானும்’ தொடரில் “பேரிடர் காலத்து குழந்தைகள்” என்ற தலைப்பில், நான் அதிகம் பேசாத, அறியாத விஷயங்களை தொட்டு எழுதி இருக்கிறார். தொடர்ச்சியான உரையாடல்களை தங்களது கட்டுரைகள் மூலம் இவர்கள் நடத்தி வருகிறார்கள்.
கலைஞர் டிவி ஆசிரியர், ப. திருமாவேலன் அவர்கள் எழுதிய “காந்தியார் சாந்தியடைய” புத்தகத்தை வைத்து “காந்தியின் – ராமராஜ்யம்” என்கிற கட்டுரை வெளியாகி இருக்கிறது. அண்ணல் அம்பேத்கர் எழுதிய “ஒரு விசாவுக்கு காத்திருத்தல்” புத்தகத்தின் அறிமுகமும் இந்த இதழில் வெளியாகி இருக்கிறது. கட்டாயம் வாசிக்க வேண்டிய கட்டுரைகள் இவை.
சமூகநீதிக்கதைகள் பகுதியில், Independent Architect ஜெயஸ்ரீ ராமலிங்கம் அவர்களின் வெற்றிக்கதையை படிக்கலாம்.
பல்சுவையும், பல்வேறு தகவல்களையும் தரும் ஒரு இதழாக இது இருக்கும்.