வணக்கம்.
இம்மாத திராவிட வாசிப்பு மின்னிதழில் அன்றாட வாழ்வில் பெரியாரியல் தொடரில் இரண்டு கட்டுரைகள் வெளியாகி இருக்கிறது. கலைஞரின் இரு புனைவு கதைகள் குறித்த அறிமுக கட்டுரையும், கலைஞர் குறித்த கவிதையொன்றும் வெளியாகி இருக்கிறது. இணையத்தில் திராவிட பிரச்சார முறைகள் எனும் கட்டுரையும், பெண் விடுதலை குறித்து தந்தை பெரியாரின் கருத்துகள் அடங்கிய ஒரு தொகுப்பும் இடம்பெற்று இருக்கிறது. தர்க்கம் செய்வோம் என்கிற பதிவும், கோவை மண்டலமும் சமூக நீதி அரசியலும் என்கிற சிறு கட்டுரையும் இடம்பெற்று இருக்கிறது.
இந்த இதழுக்காக பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதித்தந்த தோழர்களுக்கு எங்களது வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
திராவிட வாசிப்பு குறித்த உங்களது மேலான கருத்துகளை, விமர்சனங்களை எதிர்பார்க்கிறோம். தங்களது மேலான கருத்துகளையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறோம். [email protected] என்ற மின்னஞ்சலுக்கு உங்கள்
கருத்துகளையும் படைப்புகளையும் அனுப்புமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி!