வணக்கம்.
திராவிட வாசிப்பு மின்னிதழின் பத்தாவது இதழ் இது.
அமேசான் நடத்திய கிண்டில் போட்டியில் திராவிட எழுத்தாளர்கள் வெற்றி பெற்றதை அடுத்து, இந்த இதழை கிண்டில் வெற்றி சிறப்பிதழாக கொண்டு வந்து இருக்கிறோம். போட்டியில் வெற்றிபெற்ற எழுத்தாளர். கோவி. லெனின், மருத்துவர். புருனோ, டான் அசோக், ரவிசங்கர் அய்யாக்கண்ணு, பாலாசிங் ஆகியோரின் பேட்டிகள் இந்த இதழில் வந்து இருக்கிறது. ஆங்கிலத்தில் கதைகள் எழுதிய மருத்துவர். பூவண்ணன் கணபதி மற்றும் கதிர் ஆர்.எஸ் ஆகியோரின் பேட்டிகளும் இருக்கிறது.
கிண்டில் போட்டிகளில் தங்கள் பங்களிப்புகளை அளித்த கார்ட்டூனிஸ்ட் கௌதம் அம்பேத்கர், கவர் டிசைனர் யூசுப் பாசித், திராவிட வாசகர் வட்டம் மூலமாக அண்ணா சிறுகதை போட்டியை ஒருங்கிணைத்த கபிலன் காமராஜ், சமூக நீதியை தன் கதைகள் மூலமாக வெளிக்கொணர்ந்த வியன் பிரதீப் ஆகியோர் தங்களது கிண்டில் அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.
இம்மாத இதழில், பெரியாரிய வாழ்வியலை குறித்து தோழர் கனிமொழி எழுதும் தொடரும், குழந்தைகள் செயல்பாட்டாளர் இனியனின் ‘குழந்தைகளும் நானும்’ தொடரும் வெளியாகிறது. தொடர்ச்சியான உரையாடல்களை தங்களது கட்டுரைகள் மூலம் இவர்கள் நடத்தி வருகிறார்கள்.
நாகூர் அனிபா குறித்து யாசிர் எழுதிய கட்டுரையும், முரசொலி குறித்து பிரேம் முருகன் எழுதிய கட்டுரையும் இந்த இதழில் வெளியாகி இருக்கிறது.
பல்சுவையும், பல்வேறு தகவல்களையும் தரும் ஒரு இதழாக இது இருக்கும்.