வணக்கம்.
திராவிட வாசிப்பு மின்னிதழின் ஐந்தாம் மாத இதழ் இது.
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில், சமத்துவம் ஓங்கவும், சமூக நீதி தழைக்கவும், வேற்றுமைகள் நீங்கி, ஒற்றுமைகள் வளரவும் பாடுபடுவோம்.
திராவிட வாசிப்பின் இந்த இதழில், திருக்குறள், திருவள்ளுவர் குறித்து இரண்டு விரிவான கட்டுரைகள் வெளியாகி இருக்கிறது. ஒன்றை திரு. அருள் பிரகாசம் அவர்களும் மற்றொன்றை தோழர். போதி சத்வா அவர்களும் எழுதி இருக்கிறார்கள். இரண்டுமே, திருக்குறளை வெவ்வேறு கோணத்தில் அணுகி எழுதப்பட்ட ஆய்வு கட்டுரைகள்.
ஊடக அறம் குறித்து தோழர் சாந்தி நாராயணன் எழுதி இருக்கும் கட்டுரை இன்றைய ஊடகங்களையும், அதன் சார்பு நிலையையும், அது சமூகத்தை எந்தளவுக்கு பிரதிபலிக்கிறது என்பது குறித்தும் ஒரு முக்கியான கட்டுரையாக வந்திருக்கிறது.
தோழர். விக்னேஷ் ஆனந்த் அவர்கள் எழுதிய அண்ணாவின் பார்வையில் பொதுவுடைமை, அண்ணாவின் சிந்தனைகளிலும், திராவிட சித்தாந்தங்களிலும் எப்படி பொதுவுடைமை கருத்துகள் இருக்கிறது என்று விளக்கப்பட்டு இருக்கிறது. ஒரு நல்ல திறப்பை தரும் கட்டுரை இது.
முதன்முறையாக திராவிட வாசிப்பு இதழில் ஒரு ஆங்கில கட்டுரை வெளியாகி இருக்கிறது என்பது மகிழ்ச்சி. இந்த இதழில் மூத்த வழக்கறிஞர் திரு. அப்பாவு ரத்தினம் அவர்கள் எழுதிய “Legacy of Dravidian movement” என்ற திராவிட இயக்க வரலாறை கூறும் கட்டுரை ஆங்கிலத்தில் வெளியாகி இருக்கிறது.
திராவிட கவிதைகள் என்ற பகுதியில், கவிஞர் மீரா அவர்களின் ஊசிகள் தொகுப்பில் இருந்து “தமிழ்ப்பற்று” என்ற கவிதையை கொடுத்து இருக்கிறோம். சிந்தனையை தூண்டும் சுவாரசியமான கவிதை அது. படித்துப்பாருங்கள்.
புத்தக அறிமுகத்தில், மருத்துவர். ப்ரூனோவின் பேலியோ உணவின் அறிவியலும் உளவியலும் என்ற முக்கியமான புத்தகம் குறித்த அறிமுகமும் புத்தக லிங்கும் இருக்கிறது. அவசியம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.
திராவிட காணொளிகள் பகுதியில் கொடுக்கப்பட்ட அணைத்து காணொளிகளும் கட்டாயமாக பார்க்கப்படவேண்டியவை. மிக முக்கியமானவை. பாருங்கள். திராவிட வாசிப்பு குறித்த உங்களது மேலான கருத்துகளை, விமர்சனங்களை எதிர்பார்க்கிறோம். கீழ்காணும் மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்துகளை சொல்லுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!