திராவிட வாசிப்பு மின்னிதழின் 13வது இதழ் இது. திராவிடமாதமான செப்டம்பரில் பெரியார், திமுக குறித்த சிறப்பான கட்டுரைகள் இடம்பெறுகிறது. அன்றாட வாழ்வில் பெரியாரியல் தொடரின் 5 வது பகுதியாக கனிமொழி ம.வீ அவர்கள் எழுதும் கட்டுரையும், சமத்துவபுரம் குறித்து சூர்யா கிருஷ்ணமூர்த்தி எழுதிய கட்டுரையும், முரசொலி மாறனின் எழுத்தை மொழிபெயர்த்த மருத்துவர் சாய். லட்சுமிகாந்த் அவர்களின் கட்டுரையும், டாக்டர் மா. நன்னன் அவர்கள் எழுதிய ஒப்பற்ற சிந்தனையாளர் பெரியார் என்கிற புத்தகத்தை முன்வைத்து ராஜராஜன் ஆர்.ஜெ எழுதிய கட்டுரையும், டாக்டர். தொல். திருமாவளவன் அவர்கள் எழுதிய அமைப்பாய் திரள்வோம் புத்தகத்தில் இருந்து “ஒருமைத்துவமும் பன்மைத்துவமும்” என்கிற கட்டுரையை முன்வைத்து ராஜராஜன் ஆர்.ஜெ எழுதிய கட்டுரையும் இடம்பெறுகிறது.
மருத்துவர் யாழினி எழுதிய “TO POLITICIZE OR NOT TO POLITICIZE: NEET AS A MEANS TO REVISIT THE POLITICS OF THE GOVERNED – YAZHINI P.M.” என்கிற ஆங்கில கட்டுரையும், நவீன தமிழத்தின் தந்தை என்கிற ரௌத்திரனின் கட்டுரையும், பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னாரா? என்கிற சௌமியாவின் கட்டுரையும், திமுகவின் தேவை என்கிற கணபதி சங்கரின் கட்டுரையும், பெரியார் – அண்ணா சட்ட எரிப்பு என்கிற கௌதமின் கட்டுரையும் இடம்பெறுகிறது.