- Available in: Kindle, PDF
- ISBN: B08GZVCJ2V
- Published: August 1, 2020
வணக்கம்.
திராவிட வாசிப்பு மின்னிதழ் ஓராண்டை நிறைவு செய்து இருக்கிறது. கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் அண்ணா சிறப்பிதழாக தொடங்கப்பட்டு, இதோ 12 ஆம் இதழ் “கலைஞர் சிறப்பிதழாக” வெளியாகி இருக்கிறது. இந்த ஓராண்டில் அரசியல், கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு என்று பல்வேறு தளத்தில் பல படைப்புகள் வெளியாகின. தொடர்ந்து எழுத்துக்களை தரும் படைப்பாளிகளுக்கும், அதை தொடர்ந்து வாசித்து ஊக்கம் தரும் உங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த திராவிடப் பயணம் தொடரும்..
முதலாவது ஆண்டு இதழ் “கலைஞர் சிறப்பிதழாக” வருவதை பெருமையாக கருதுகிறோம்.கலைஞர் ஓய்வெடுக்க ஆரம்பித்து இரண்டாண்டுகள் ஆன வேளையில் இந்த இதழ், நமது வருங்கால பயணத்தை சுட்டிக்காட்டும் ஒரு சிறிய வெளிச்சமாக இருக்கும் என கருதுகிறோம்.
இந்த இதழில் கலைஞரின் எழுத்துகளில் சிலவற்றை கொண்டுவந்துள்ளோம். குறிப்பாக அவரது புனைவு இலக்கியம் அதிகம் பேசப்படவில்லை. கலைஞரின் மிகச்சிறந்த கதையாக சொல்லப்படுகிற “குப்பைத்தொட்டி”யை இந்த இதழில் வாசிக்கலாம். கலைஞரின் கட்டுரைகளில் இருந்து சில முக்கிய பக்கங்களும், பலரை ரசிக்க, கண்கலங்க, உணர்ச்சிபெற வைத்த கவிதைகளும் இடம்பெறுகிறது.
கலைஞர் குறித்து தலைவர்கள், ஆளுமைகள், உடன்பிறப்புகள் என பலர் எழுதிய படைப்புகளும் இந்த இதழில் வாசிக்கலாம்.
கலைஞர் என்பவர் ஒரு மாபெரும் இந்தியத்தலைவர் என்பதை பறைசாற்றும் கட்டுரைகள் இதில் இடம்பெறுகின்றன. குறிப்பாக கன்னடத்தில் ஒரு கட்டுரையும், போஜ்பூரியில் ஒரு கட்டுரையும் பிற மாநில தோழர்களால் எழுதப்பட்டு இந்த இதழில் வெளிவந்திருக்கிறது.
மூன்று சிறுகதைகள், இருபதுக்கும் மேற்பட்ட கவிதைகள், முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், கலைஞரின் நகைச்சுவை, வாழ்க்கைக்குறிப்பு, மீம்ஸ் என பல்வேறு வடிவிலான தொகுப்பாகவும் பல்சுவையை தரும் ஓர் இதழாகவும் இது இருக்கும்.
இது ஒரு மிகப்பெரிய கூட்டு முயற்சியின் விளைவாக வெளிவரும் இதழ். இந்த இதழ் வெளிவர பின்னால் இருந்து உழைத்த, ஊக்குவித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
வெல்க திராவிடம்!