திராவிட வாசிப்பு மின்னிதழின் இரண்டாம் மாத இதழ் இது. தமிழக/ இந்திய வரலாற்றை புரட்டிப்போடும் கீழடியின் நான்காம் கட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகும் காலத்தில், “கீழடி காட்டும் பாதை” என்னும் கட்டுரை இந்த இதழில் வெளியாகி இருக்கிறது. குழந்தைகள் மற்றும் சமூக செயல்பாட்டாளர் இனியன் அவர்கள் எழுதும் “குழந்தைகளுடன் நான்” என்ற தொடர் இந்த இதழில் இருந்து தொடங்குகிறது. தொழில்நுட்ப பக்கத்தில், அசோக்குமார் அவர்கள் எழுதிய “முப்பரிணாம அச்சிடுதல்” குறித்த கட்டுரையும், மருத்துவர். நந்தினிஸ்ரீ எழுதிய, “விஞ்ஞானம் கட்டுடைக்கும் செவ்வாய் தோஷம் என்னும் புரட்டு” எனும் கட்டுரையும் வெளியாகி இருக்கிறது. கனிமொழி அவர்கள் எழுதிய “பெண்களின் தாய் – பெரியார்” என்ற கட்டுரையும், புத்தக அறிமுகங்களாக, பேரறிஞர் அண்ணாவின் “பொன்னொளி” யும், பேராசிரியர். சுப வீரபாண்டியன் அவர்களின் “திராவிடம் வளர்த்த தமிழ்” ஆகிய புத்தகங்களை குறித்த கட்டுரைகளும் இந்த இதழில் இடம்பெற்று இருக்கிறது.