பேருந்துகளை அரசுடமை ஆக்கினார் கலைஞர் என்பது தான் நாம் இதுவரையில் அறிந்து வைத்திருக்கும் அல்லது அறிய வைக்கப்பட்டிருக்கும் செய்தி. ஆனால், ஸ்பின்னிங் மில்ஸ் எனப்படும் பின்னலாடை நிறுவனங்களையும் அரசுடமை ஆகியவர் கலைஞர் என்பது புதிய செய்தி ; தமிழ்நாடு பின்னலாடை நிறுவனம் கலைஞரால் உருவாக்கப்பட்டது என்பதும் புதிய செய்தி.
ஆண்டுகளில் வேலைக்குச் செல்லும் மகளிருக்கு, சேவை இல்லங்களையும், மகளிர் விடுதிகளையும் தொடங்கியவர் கலைஞர் ; இந்தியாவில், வேறு எந்த தலைவரும் யோசிப்பதற்கு முன்னர், சமூக மேம்பாட்டுத் திட்டங்களை நிரைவேற்றியவர் கலைஞர்.
இப்படி, கலைஞர் அவர்களின் அறியப்படாத சாதனைகளை தொகுத்து வெளியிட்டால், எல்ல்லோரும் அறிந்து கொள்வார்கள் என்ற எண்ணத்தால் விளைந்த சிறு முயற்ச்சியே இந்நூல்.
நண்பர்கள், தங்களது மேலான ஆதரவரையும், செம்மைப்படுத்த கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளவும்.
வாழ்க கலைஞர்; வளர்க திராவிடம்; ஓங்குக சமத்துவம்.
– வெற்றிச் செல்வன், B.E, PMP