காமராசர், தேசிய கட்சியில் இருந்ததால், திராவிட இயக்கத்துடன் சில விஷயங்களில் முரண்பட்டு இருந்தார் என்பதற்காக, அவரை இந்துத்வவாதிகளும் ஜாதியவாதிகளும் சொந்தம் கொண்டாட விட்டுவிட முடியாது. காமராசர் ஆட்சியை பொற்கால ஆட்சி என்றும் கலைஞர் கருணாநிதி ஆட்சியை அதற்கு எதிராகவும் நிலை நிறுத்தும் குள்ளநரி வேலையை வலதுசாரிகள் தொடர்ந்து செய்கின்றனர். ஆனால், காமராசரும் கலைஞர் கருணாநிதியும் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த மதிப்பை அறியாத பொதுமக்கள், வலதுசாரிகளின் இந்த விசமப் பிரச்சாரத்தை நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
கலைஞர் கருணாநிதியையும் திமுகவையும் திராவிட இயக்கங்களையும் காமராசருக்கு எதிராக சித்தரிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்துவதே இந்த புத்தகத்தின் நோக்கம். காமராசர் தோல்வியடைய காரணம் என்ன..? திராவிட இயக்கங்களும் கலைஞர் கருணாநிதியும் காமராசருக்கு எவ்வளவு ஆதரவாக இருந்தனர் என்பதை விளக்கும் வகையில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.