திராவிடர் கழகம் ஒரு கலங்கரை விளக்கம். காலத்தின் தேவைக்கேற்ப சமுகத்திற்கு வரும் ஆபத்துகளை விளக்கும் அறிவுப் பேரிகை. போராட்டம், பிரச்சாரம் ஆகிய இரண்டும் இதன் உயிரோட்ட வழிமுறைகள். தமிழர் தலைவர் ஆசிரியர் அவ்வப்போது சிறப்புக் கூட்டங்களை நடத்தி புதிய கருத்துகளை, சிந்தனைகளைத் தருவார். இந்தக் கூட்டங்களுக்கு எப்போதும் ஓர் ஈர்ப்பு உண்டு. தலைமுறை இடைவெளியின்றி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் தொடங்கி சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், தலைவர்கள், பல்துறை சார்ந்த மூதறிஞர்கள் என அனைவரும் பங்கேற்பார்கள்.
அந்த வகையில் சென்னை பெரியார் திடலில் 03.10.2018 அன்று தொடங்கி மூன்று நாட்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மனுதர்ம ஆராய்ச்சி சொற்பொழிவு ஆற்றினார்.
- மனுதர்மமும் அம்பேத்கரும்
- மனுதர்மமும் தந்தை பெரியாரும்
- மனுநீதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி
ஆகிய தலைப்புகளில் இச்சொற்பொழிவுகள் நடைபெற்றன.