நவீன மருத்துவ நூல்களில் இருக்கும் அடிப்படை விஷயங்களை பேச்சு வழக்கு தமிழில் எழுதி, நீரிழிவு, உடல் பருமன், உணவு குறித்த கேள்விகளுக்கு முற்றிலும் அறிவியலின் அடிப்படையில் விடையளிக்கும் ஒரு முயற்சியே இந்த சிறிய நூல்.
இந்த நூலை மட்டும் படித்து விட்டு, நீங்கள் குறைமாவு உணவை உட்கொள்ளவோ, பரிந்துரைக்கவோ முடியாது. “30 நாட்களில் பேலியோ” என்ற எதிர்ப்பாப்பில் இதை தயவு செய்து வாசிக்காதீர்கள். மருத்துவர்களை பொறுத்த வரையில் மருத்துவக்கல்லூரில் முதலாம் ஆண்டும் முதல் இறுதியாண்டு வரை நீங்கள் ஏற்கனவே வாசித்த, கற்றுக்கொண்ட விஷயங்கள் பலவற்றை இணைத்து உங்களை இயல்பாக சிந்திக்கத்தூண்டும் ஒரு இழையாகத்தான் இந்த நூல் இருக்கும். மருத்துவரல்லாதவர்களைப் பொருத்தவரை உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் குறைமாவு உணவினை எந்த தயக்கமும் இல்லாமல் சாப்பிட இங்கு கூறப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு உதவும்.