இந்திய துணைக் கண்டத்தின் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்படும் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி அவர்கள் கொண்டு வந்த 1975ம் ஆண்டு மிசா காலத்தை எதிர்த்த ஒரு மாபெரும் போராளியான கலைஞர் திரு. மு கருணாநிதி அவர்களது அறவழி போராட்ட வரலாறு. முன்னாள் முதல்வர், ஒரு இயக்கத்தலைவர், நாளேட்டின் ஆசிரியர் என்று பரிமாணங்களை கண்ட ஒரு பெருமை மிகு ஆளுமை, மாநில சுயாட்சிக்காக,ஜனநாயகம் காத்திட, எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் களத்தில் இறங்கி போராட்டம் இன்று வரையில் பெரிதும் பேசாத வரலாறு.