எது இலக்கியம்? எது இலக்கியமில்லை என்ற சண்டைகளுக்குள் செல்லாமல், பிரதீப் ஒரு விசயத்தை அழுத்தமாகப் பதிவு செய்து இருக்கிறார். எதை எழுத வேண்டும், தன் கதைகள் எதைப் பேச வேண்டும் என்கிற தெளிவு அவருக்கு இருக்கிறது.
இந்தச் சிறுகதை தொகுப்பில் இருக்கும் கதைகள் பேசுவது, தற்கால வாழ்வியல் குறித்தே! குறிப்பாக, ஐடி துறையின் எழுச்சிக்கு பிறகு நிகழ்ந்த மாற்றங்களை, நடுத்தர குடும்பத்தில் அது ஏற்படுத்திய தாக்கங்களைப் பிரதீப் படம் பிடித்துக் காட்டி இருக்கிறார். கிராமங்களிலிருந்து படித்து, வேலைக்கு வரும் இளைஞர்களின் வாழ்வை பேசி இருக்கிறார். இக்கால இளைஞர்களின் சிந்தனை போக்குகளை அழகான உரையாடல்கள்மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
நாலாந்தர எழுத்து என்ற சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 9 கதைகள் உள்ளது.
வழி போக்கர்
விருதும் ஒரு ரூபாய் இட்லியும்
பெயருக்குப் பின்னால்
நாலாந்தர எழுத்து
லாஸ் ஏஞ்சிலஸ் வரை
நம்பிக்கை நாணயம்
ஊர்க் குளம்
பிரியாணி
யார் அவர்
லிவிங் டுகெதர், காதல், பெண்ணியம், தினசரி பார்க்கும் மனிதர்கள், தகவல் தொழில் நுட்பத் துறை, இன்ஜினியர்ஸ், நாலாந்தர எழுத்து, முதல் பட்டதாரி, பிரியாணி, கிராமத்து வாழ்க்கை, நீட் தேர்வு, ஐந்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு, மற்றும் சம கால அரசியல் பற்றி எல்லாம் பேசும்.
இந்தக் கதைகளைப் படிக்கப் படிக்க உங்கள் மன ஓட்டத்தில் நீங்கள் கடந்து வந்த மனிதர்கள்பற்றி நிச்சயம் உங்கள் நினைவிற்கு வரும். நீங்கள் நினைக்காத ஒரு முடிவுடன் ஒவ்வொரு கதைகளும் முடியும்.விரைவாகப் படித்து முடிக்கும்படியான எளிமையான எழுத்து நடையில் இருக்கும்.
இதுவரை நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி, தொடர்ந்து உங்கள் ஆதரவைத் தாருங்கள். படித்து முடித்த நண்பர்கள், உங்கள் கருத்துக்களை ரிவ்யூ செக்சனில் ஆங்கிலத்தில் தரவும்.