வணக்கம்.
2021 தமிழக சட்டசபை தேர்தலை ஒட்டி, திராவிட வாசிப்பு மின்னிதழை, சிறப்பிதழ்களாக கொண்டுவருகிறோம். கடந்த மாதம் டிசம்பர் 2020 இதழ், பேரறிஞர் அண்ணாவின் ஆட்சிக்காலத்தை முன்வைத்து “சி.என்.அண்ணாதுரை எனும் நான்” என்கிற தலைப்பில் வெளியானது. இந்த இதழில், கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தை முன்வைத்து “மு. கருணாநிதி எனும் நான்” என்கிற தலைப்பில், பல்வேறு கட்டுரைகளை கொண்டு வந்து இருக்கிறோம். கலைஞரின் ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை, அரசாணைகளை, சமூக மாற்றங்களை படம்பிடித்து காட்டும் வகையில் கட்டுரைகள் இடம்பெற்று இருக்கின்றன. கலைஞரின் ஆட்சியை குறித்த அறிஞர்களின் ஆய்வுகளும் இடம்பெற்று இருக்கிறது. கலைஞரின் சாதனைகள் என்பது அள்ள அள்ள குறையாதது, கடல் போன்று பெரியது. அதை 1000 பக்க புத்தகத்திலும் நிரப்ப முடியாது. இருப்பினும், இந்த இதழில் இடம்பெற்ற கட்டுரைகள் குறிப்பிடத்தகுந்தவைகளாக இருக்கும் என்று நம்புகிறோம். ஏற்கனவே, ஆகஸ்ட் 2020 இதழை கலைஞர் சிறப்பிதழாக கொண்டு வந்தோம். இந்த இதழும் கலைஞரின் ஆட்சி திறனை பறைசாற்றும் வகையில் இருக்கும் என நம்புகிறோம்.
இந்த இதழுக்காக பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதித்தந்த உடன்பிறப்புகளுக்கும், கலைஞர் குறித்த ஆய்வு கட்டுரைகளை எழுதிய அறிஞர்களுக்கும் எங்களது வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த இதழில் வேறு கட்டுரைகளை எழுதிய தோழர்களுக்கும் நன்றிகள்.
இந்த சிறப்பிதழ் உங்களுக்கு பல்வேறு வரலாற்று தகவல்களையும், வரலாற்று அறிவையும் தரும் என்று நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.