வணக்கம்.
திராவிட வாசிப்பு மின்னிதழின் எட்டாவது இதழ் இது.
ஏப்ரல் மாதம் பல தலைவர்களை/ ஆளுமைகளை நாம் நினைவுகூரும் மாதம். அவற்றுள் சிலரான அண்ணல் அம்பேத்கர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி. தியாகராயர், தமிழவேள் கோ. சாரங்கபாணி ஆகியோரை குறித்த கட்டுரைகள் இந்த இதழில் இடம்பெற்று இருக்கிறது. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் எழுத்துகள் இந்த இதழில் இடம்பெற்று இருக்கிறது. சர். ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்களை குறித்த ஒரு கட்டுரையும் இடம்பெற்று இருக்கிறது.
பெரியாரிய வாழ்வியலை குறித்து தோழர் கனிமொழி எழுத ஆரம்பிக்கும் தொடரும், குழந்தைகள் செயல்பாட்டாளர் இனியனின் ‘குழந்தைகளும் நானும்’ தொடரும், சண். அருள்ப்ரகாசம் அவர்கள் எழுதிய ‘திமுகவும் திருக்குறளும்’ கட்டுரையின் இரண்டாம் பகுதியும் இந்த இதழில் வெளியாகிறது.
சுதர்சன் ஹரிபாஸ்கர் எழுதிய Half a day for Caste? புத்தகத்தின் விரிவான விமர்சனமும், இராஜேந்திரப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் கவிஞர் சுரேஷ் அவர்களின் பேட்டியும் இடம்பெற்று இருக்கிறது.
பல்சுவையும், பல்வேறு தகவல்களையும் தரும் ஒரு இதழாக இது இருக்கும்.