சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்று மனித வாழ்வுக்கு இலக்கணம் கற்பித்தவர் தந்தை பெரியார் அவர்கள்.
சுயமரியாதைக்குத் தடையாக உள்ள ஜாதியை ஒழிப்பதில் தீவிரமாகப் போராடினார்கள். 6 வயதிலேயே ஜாதி ஒழிப்பில் ஈடுபட்டு, 10 வயதில் தண்டனை பெற்ற சுய சிந்தனையாளர் தந்தை பெரியார் அவர்கள்.
கடவுள், மதம், ஜாதியால் உண்டான பிறவி பேதத்தை ஒழித்து அனைவருக்கும் அனைத்தும் என்ற சமத்துவத்தை உருவாக்கும் போராட்டங்களில் ஈடுபட்டார். அப்படிப்பட்ட போராட்டங்களில் ஒன்றுதான் வகுப்புரிமை என்ற இடஒதுக்கீடு போராட்டம். வகுப்புரிமைப் போராட்டத்தில் கிடைத்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள தமிழர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவதே இந்தத் தொகுப்பு.