தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், தன்னுடைய தொடர்ந்த மக்கள் சேவையாலும் அப்பழுக்கற்ற அரசியல் நடவடிக்கைகளாலும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் முன்மாதிரியாக இயங்கி வருகிறார். மக்களின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் உரியவராக விளங்கும் ஸ்டாலின், ஒரு நீண்ட அரசியல் சமூகநீதிப் புரட்சி இயக்கமாம் திராவிட இயக்கத்தின் வழி வந்தவர். ஈ.வெ.ராமசாமி பெரியார், அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி போன்ற அவ்வியக்கத்தின் முன்னோடிகளான தலைவர்கள் காட்டிய வழியில் அயராது நின்றுழைப்பவர் ஸ்டாலின். அவர் ஒரு சராசரி அரசியல்வாதி அல்ல; தமிழ் நாட்டு அரசியல் களத்தில் கோபுரமாக உயர்ந்து நிற்கும் சிறப்புகளின் உறைவிடம் அவர். தமிழக சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் எண்ணிலாத சாதனைகளை நடத்திக் காட்டியவர் ஸ்டாலின்.
தமிழக அரசியல் எதிர்காலத்தின் விடியலில் இந்நாட்டைப் பீடித்துள்ள பீடைகள் அகன்று, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடைந்து வளமும் நலமும் பெருகிட வழி வகுக்கும் சமூகநீதிக் கொள்கையை உயர்த்திப் பிடிப்பவராக ஸ்டாலின் உள்ளார். பெரியோர்களின் நல்லாசியும், மக்களின் பேராதரவும் இன்றுபோல் என்றும் அவருக்கு உறுதுணையாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. ஸ்டாலினுடைய சில தனித்தன்மைகளை சுட்டிக்காட்டுவதாக இந்த மின்னூல் அமைந்துள்ளது. படித்து பயன்பெறுங்கள்.
உள்ளடக்கம்:
நூலாசிரியரைப் பற்றி…
1. எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் யார்?
2. De facto எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் (2011-2016)
3. மக்கள் முதல்வர் ஸ்டாலின்
4. பதவி ஆசை இல்லாத மக்கள் தலைவர்
5. காணக் கிடைக்காத நற்குணக் குன்று ஸ்டாலின்
6. கடமை தவறாத, கண்ணிய மிக்க தலைவர்
கடமை
கண்ணியம்
கட்டுப்பாடு
கடின உழைப்பு
பேச்சு வன்மை
7. ஆதிக்க வெறிக்கு இருப்புக் கடிவாளம் போடும் ஸ்டாலின்