ஜோதிடம் பற்றிய தந்தை பெரியாரின் அறிவார்ந்த வினாக்களோடு தொடங்கும் இந்த நூல் ஜோதிடம் என்பது அறிவியல் அல்ல அது ஒரு போலி அறிவியல் களஞ்சியம் என்பதை ஆதாரப்பூர்வமாக விளக்குகிறது.
ஜோதிடம், ஜாதகம், கைரேகை உள்ளிட்ட மூடநம்பிக்கைகளைப் பற்றி ஜிடி நாயுடு, டாக்டர் பராஞ்சிபே, மகாதேவன் உள்ளிட்ட அறிஞர்களின் ஆய்வுகளை உள்ளடக்கிய அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்கிறது.
மேலும் இந்நூல் ஜோதிடத்தால் ஏற்படும் காலக்கேடு, தீமைகள் மற்றும் மனிதத்தன்மையற்ற செயல்களையும் விளக்குகிறது.