இப்படியொரு துறை இருப்பதே எனக்கு அந்தத் துறையில் வேலைக்குச் சேர்ந்த பிறகுதான் தெரியும். என்னைப் போன்ற முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு உதவும் விதமாகவும், படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இந்தத் துறையில் நுழைவதற்கான ஒரு வழிகாட்டியாகவும் இந்தப் புத்தகம் இருக்கும்.
Reviews
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
3 நன்கு பரிச்சயமான சொற்கள், ஆனால் இந்த நூலை படித்த பின்புதான் அது எத்தகைய மெய்யியல் கோட்பாட்டின் சாராம்சம் என்பதை புரிந்து கொண்டேன் .
நேற்று மாலை ஒரு துன்பியல் நிகழ்வின்பால் என் உறவினர் ஒருவருக்கு ஆறுதல் சொல்லினேன். இரவு இந்த புத்தகத்தைப் படித்தேன், படிக்கும்போதே சில பத்திகள் அவருக்கு ஆறுதலாக இருக்கும் என்று “Screen-Shot” அனுப்பினேன். அவர் படித்துவிட்டு மிகவும் பிடித்துப்போய் தொடர்ச்சியான பக்கங்கள் கேட்டார்.
பிரபாகரன் பாண்டியன்
மாயப் பெருநிலம்
ஈழத்தமிழர் பிரச்சனை என்பது ஆயிரம் மர்ம நாவல்களை எழுதுவதற்கான உள்ளடக்கத்தை கொண்டிருக்கும் குழப்பங்களும் பொய்களும் நிறைந்திருக்கும் பிரச்சனை. அதில் ஒரு துளியை எடுத்து தன் கற்பனையை கலந்து கொடுத்திருக்கிறார் சென்பாலன்.
ஏதோ போகிறபோக்கில் சொல்லப்பட்ட கதையல்ல. ஒவ்வொரு அத்தியாயத்தையும் பலப்படுத்துவதற்காக அவர் சேர்த்திருக்கும் தரவுகள் நமக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது. டாக்டர் சென்பாலன் தொடர்ந்து இதுபோன்ற தீவிர இலக்கிய படைப்புகளை தமிழுக்கு வளங்கவேண்டும்.
மருத்துவர். பூவண்ணன்
தோழர் சோழன்
சமீபகால தமிழக வரலாற்றில் மிகப் பரபரப்பாக இருந்த 80களின் பிற்பகுதியில் நடந்த பல சம்பவங்களும் பல நாயகர்களும் வில்லன்களும் நிழலாக இந்தக் கதை வழியாக கடந்துசெல்கிறார்கள்.
இந்தப் புத்தகம், மிக விறுவிறுப்பான ஒன்று. படிக்க கையில் எடுத்தால், கிண்டிலையோ, ஐபேடையோ, போனையோ கீழே வைக்க முடியாது.
ஒரு நாவலுக்கான விறுவிறுப்பு என்பதைத் தாண்டி, ஒரு சினமாவுக்கான பிரம்மாண்டமும் சம்பவங்களும் இந்தப் புத்தகத்தில் உண்டு!
முரளிதரன் காசி விஸ்வநாதன்
பத்திரிக்கையாளர்
Meet the doctor of Oman who is a Tamil writer for the world!
This year, KDP Pen to Publish Contest encouraged authors of regional languages by including categories for Hindi and Tamil alongside English.
One of the talented writers who won is Senthilbalan Manickam—an orthopaedic surgeon who heals the sick in Oman but also writes mysteries in Tamil.
“Parangi Malai Irayil Nilayam” is Sen Balan’s second book in a mystery series that won at the KDP Pen to Publish Contest in the Tamil long-form category. The story is set in a suburban railway station in Chennai, infamous for frequent train accidents, and solving the mysteries is a detective named Karthick Aldo. Read on to learn more about the brilliant mind who wrote this award-winning book.